Wednesday, July 13, 2016

ஊரும் ஊத்தயும்..!!

அஸ்ஸலாமு அலைக்கும்.. எனத்தடா இது அபூஸாலியோட பெரிய கரச்சல்ன்டு நீங்க எல்லாரும் ஏசுறது வெளங்குது ஈந்தாலும் எங்கட ஊற பத்தி நாங்கதானே வாப்பா பேசோனம்..

எல்லாருக்கும் தெரியும் ஊருக்குள்ள முசீபத்து கூடின மாதிரியே இப்ப நோயும் கூடிட்டுது.. முந்தியெல்லாம் 70,80 வயசுலயும் ஆடு மேய்க பெய்த்தாக்கல் ஈந்தாகோ இப்ப அந்த வயசு ஆக்கோல பாக்குறதும் கஷ்டம்.. அல்லாஹ் யார் யாரயாலும் காபத்தோனம் இப்பவெல்லாம் சின்ன சின்ன வயசுல நோய் வந்து மவ்தாகுற ஆல்கோல் நெறஞ்சி..

இதுக்கெல்லாம் காரணம் என்தன்டு பாத்தா "நோய்தான்"டு செல்லுவங்கோல்.. நோய்தான் ஆனா இந்த நோய் எங்கால வெருகுதுன்டு கொஞ்சம் பாப்போம்..

சும்மா யோசிச்சு பாருங்கோல் இப்ப ஊர்ல சிகரட் விக்குறதும் கொறவு (ஒவ்வொரு எடத்துல விக்குறதாாாான் அத பத்தி இன்னொரு நாளைக்கு பேசுவோம்) சாராய கடயும் இல்ல அப்பவும் எங்கட ஊருக்குள்ள கென்ஸர் வாரது கூட.. செரி ஆம்புளகோளுக்கு தூள் போட்றதால வெறுகுதுன்டு வெப்போமே பொம்புலகோல் தூள் போட்றதும் இல்லயல்ல அப்ப எப்டி வெருகுது?? எனக்கு தெரிஞ்சி சாப்பாடாலதான்.. "நீ என்த பெரிய டொக்டரோ?"ன்டு எனைட்ட கேப்பங்கோல்.. நான் பெரிய டொக்டர் ஒன்டும் இல்லடா வாப்பா ஆனா பெரிய பெரிய தொஸ்தர்மாரும் செல்ற இததான்...

எங்கட ஆள்கோளுக்கு ஆட்டு (B)பெடன்டாழும் அத பெகட் பன்னி விலயொன்ட அடிச்சா இல்லாடி ஏசி போட்ட கடைல வித்தா குடும்பத்தோட பெய்து வெச்சடிப்பாங்கோல்.. அப்டியாப்பட்ட ஆள்கோள்தான் ஈக்குற இங்க.. நான் சும்மா கொற செல்றன்டு நெனெக்க வாணம்.. இதுதான் உண்ம.. இப்டி நாங்க தின்ற செறில்லாத சாப்பாடால பொறகு கஷ்டபட்றதும் நாங்கதான்.. ஆள பாத்தா அற ஸைஸ் ஜெஜ்ஜால் மாதிரி ஈக்கும் ஆனா கிட்னில கல்லு ஈரல்ல மணல்ன்டு பவ்த்துக்குல்லால கப்றாத் அடிக்குறது மட்டும்தான் மிச்சம் மத்த எல்லாம் ஈக்கும்.. அப்டிதான் இப்ப ஈக்குற ஆள்கோள்ட நெலம..

இதுமட்டும் இல்ல.. சாப்பாடுதான் இப்டின்டு பாத்தா துப்பறவும் அப்டிதான்.. இப்ப டெங்கு வெருகுது ஊட்ட துப்பறவா வெத்சீக்குறங்களா? அப்டின்டு கேட்டா "ஓ மாஷா அல்லாஹ் எங்கட ஊடு கண்ணாடி மாரி சும்மா பள பளன்டு மின்னும்"அப்டின்டுதான் செல்வாங்கோல்.. செரி ஊத்தய எங்க போட்டங்கோ சீதேவின்டு கேட்டா "அந்தா முன்னால ஈக்குதே அந்த கான்ல தான்"ன்டு வாய் கூஷாம செல்வாங்கோல் இனி டெங்கு வெராம ஈக்குமா?? இது ஒத்தர் ரெண்டு பேர் செய்ர பிழ இல்ல நூத்துக்கு எம்பது பேர் இப்டிதான்.. நெல்லா அழகா ஊட்ட கூட்டி எல்லாம் செஞ்சி ஊத்தய ரோட்டோறதுல தெலய சுத்தி ஒரு வீசு வீசுட்ற.. கேட்டா நெளும்பு வெராதாம்...

இந்த கூத்தெல்லாம் பார்குற நேரம் பவ்தால சிரிப்பு வாரடா வாப்பா..
சும்மா எங்களயே குத்தம் செல்லின்டு ஈக்க வானமேன்டு கத்துற சத்தம் எல்லாம் கேகுது.. அடிச்சுக்க வந்துறாங்கோல்டா வாப்பா ஒடம்புல சீவன் இல்ல.. நான் சென்னதெல்லாம் எனக்கும் சேத்துதான்..
இன்ஷா அல்லாஹ் இன்டைல ஈந்து நெல்ல சாப்பாட தின்றதோட ஊட்டயும் றோட்டயும் துப்பரவா வெச்சிக்க போறேன்..
அங்காலூட்டு ஆலிம் காக்கா வந்து துப்பறாக்கட்டும்டு ஈக்காம நானே செய்ய போறேன்..

அப்ப பெய்த்து வாறேன் தங்கங்கோளே நான் சென்னதுல எனத்தயாலும் செரின்டா இன்ஷா அல்லாஹ் ஒரு நெல்ல மாத்தத உருவாக்க முயற்சி செய்கோடா...

பெய்து வாரேன் சீதேவிகளே.. சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகஅதுஹூ.. 

Tuesday, July 12, 2016

கழுத்து வளஞ்ச சமுதாயம்...!

ஊருக்குள்ள ஆயிரத்தெட்டு பிரச்சினடா வாப்பா அதுல ஒண்ட இண்டைக்கு பாப்போம்..
எனத்தண்டால் அண்டெக்கு ஒரு நாள் எங்கட ஏழாம் கட்ட பஸ் ல ஏறி ஆறாம் கட்டக்கு பெய்துண்டு ஈந்தேன் . முன்னுகால ஒரு கொமரு புள்ள சீட் ல ஈந்துண்டு வந்திச்சு. எனத்த அபூஸாலி நீங்க புள்ளகோல பாக்குறாண்டு யாரும் கேக்க வானம் அந்த புள்ளைடா கழுத்து வலஞ்சிடா  வாப்பா  அதான் பாவம் அல்லாஹ் இந்த புள்ளைக்கு இப்டி ஒரு ஊணத்த கொடுத்துட்டானே எண்டு கவல பட்டுண்டு கைல இருந்த பாரஸ்சல கூட அது கொடுக்காம நானே  தூக்கிண்டு நிண்டுண்டு  வந்தேன் பாவம் தானே.. நெல்ல நேரம் ஏழாம் கட்ட பஸ் சுட்டி மெதுவா டக டகண்டு போறதால செரி மாத்தள பஸ்ண்டா அடிக்குற பிறக் ல கைல இருந்த பேக் எல்லாம் ட்ரைவ்வர் ட மடிலையா ஈகும்.. சேரி விஷயத்துக்கு வாறேன்
இப்ப இந்த புள்ளைடா கழுத்தும் வலஞ்சி ஊட்டுல ஏ இப்டி ஒரு புள்ளய தெனியா அனுபிகுராகோ எண்டு யோசிச்சுண்டே எங்கட ஊருல வெலப்பம் இல்லையா எண்டு உள்ளுக்குள்ளால நெனச்சுண்டு நானும் அப்டியே நின்டுண்டு வந்ததுண்டு இக்குறேன் ஆறாம் கட்டையும் வந்தாச்சு கொன்தோஸ்தர் "இஸ்ஸர ஹயே கணுவெ பயின அய்ய இஸ்ஸராட எண்ட" அப்டிண்டு கத்தகுல இந்த புள்ள எழும்பிச்சு  டக்குண்டு அங்காகி இடத்தை கொடுத்துட்டு பார்த்தா அது கழுத்து வளஞ்சிள்ள இவ்ளோ நேரம் டெலிபோன வெச்சிண்டு வாந்திக்குது... 

சிரிக்காங்கோள்டா வாப்பா... எல்லாம் நேரம்.. இப்பவெல்லாம் புள்ளகோள் நடக்க பழகுறதுக்கு முந்தியே டெலிபோன  கொடுத்துடற இனி அதுகோலும் இப்டி கழுத்த வளச்சிண்டு தான் போற... 

எங்கட புள்ளகோள் கவனமா பெய்து வர நாங்க ஏற்றப்பாடு பண்ண படாதாண்டு நீங்க கெகேளும். பண்ணுங்கோ ஏவலொண்டாலும் ஏற்றப்பாடு பண்ணுங்கோ வானம்டு  செல்லல ஆன நீங்க பன்ற ஏற்றபாட நீங்களே கொஞ்சம் அப்ப அப்ப பார்த்துங்கோ புள்ளைட கைல டெலிபோன் ஈகுதுண்டு தெரியும் அதுல என்த ஈகுது என்த செய்துண்டு கொஞ்சம் நீங்களும் அடிக்கடி பாருங்கோ அப்ப தான் ஊருக்குள்ளால நெறய பேர்ட கழுத்து நேராகும்.. எனக்காக இல்லாட்டியும்  கொஞ்சம் ஊற பார்க்க லட்சணமா மாதோனம் இல்லையா???இப்டியே உட்டா பொறகு ஊருக்குள்ள எல்லார்டயும் கழுத்து வலஞ்சி திரிஞ்சுண்டு இருந்தா யார்டா வாப்பா வாக செல்ற...??


கொஞ்சம் எணதண்டாலும் யோசிச்சு ஒரு நெல்ல முடிவா எடுங்கோடா வாப்பா..

இன்ஷா அல்லாஹ் இன்னொரு விஷயத்தோட சந்திப்போம்... அவசரமா பெய்தா தான் ஊட்டுல பிலாக்காவும் எறச்சி கறியும் கெடைக்கும் அப்ப இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்..

அஸ்ஸலாமு அலைக்கும்....

Monday, July 11, 2016

அபுசாலிட என்ட்ரி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ...
எல்லாருக்கும் இந்த அபுசாலிய நெனவிக்குதா வாப்பா? ஓ நானே தான் கொஞ்ச காலம் பேப்பர் நோட்டீஸ் எண்டு வந்து ஊற திருத்துற பேச்செல்லாம் பேசி கடைசில அடிவாங்காம ஓடினது பெரிய செய்தி.



இப்ப பாத்தேன் பாத்தேன் செரி வராது எனய நம்பி ஒத்தனும் பேச உட்றானும்  இல்ல.. இந்த பெரிய ஊரு பாலாய் கழுகுற வாய நான் எப்படி தாண்ட வாப்பா மூடிண்டு இக்குற??? நீங்கலோளே செல்லுங்கோல் பாப்போம்...
இப்ப ஏத்தாண்டாலும் இந்த டெலிபோன் ல தானே நொண்டிண்டு தெரிஞ்சுகுறான்கோள் அதான் நானும் இப்ப டிஜிட்டல் அபுசாலியா மாறி வாந்திக்குறேன். கடைசி  காலம்டா வாப்பா இப்பெல்லாம் சாச்சா மவ்த்துண்டாலும் டெலிபோன் ல மெசஜ் வந்தா தான் தெரியும் அப்டி இக்குது நெலம...
செரி இனி இப்ப வந்தாச்சு தானே இனி கொஞ்சம் கொஞ்சம் ஏதெண்டாலும் பேசிண்டு எதாலும் ஒரு நெல்ல விஷயத்தை செய்ய பார்போம் இன்ஷா அல்லாஹ்...

நான் இங்கயும் இக்குறேன்டா வாப்பா ஏழும்டா இந்த லின்குலயும் ஒரு டச்ச பண்ணுங்கோடா .... எல்லானும் டச் போன் பாட்டி தானே.....இதுல கொஞ்சம் நியூஸும் செல்லுவ்வென் நான் ==>  புது அபூஸாலி <==